- ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவும்!
- கல்வி + அறிவு = வாழ்க்கை!
- மனம் x அறிவு = போர்க்களம்
- இதை நான் எதிர்பார்க்கல!!
- அறிவும் அரைகுறையறிவும்(கலீல்ஜிப்ரான்)
- இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு.
கல்வி அறிவு
கேள்வி அறிவு
அனுபவ அறிவு
தன்னறிவு
சொல்லறிவு
இயற்கை அறிவு
நுண்ணறிவு
ஆழ்மன அறிவு
பல்துறை அறிவு
என அறிவு பல வகைப்பட்டதாக ஒவ்வொரு துறைசார்ந்தும் பாகுபடுத்தப்படுகிறது.
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி பெற்றதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை!
என்றொரு திரைப்படப்பாடல் கூட வந்திருக்கிறது.
அன்பான தமிழ் உறவுகளே.....
அறிவெனப்படுவது யாது?
எத்தகைய அறிவு உங்களுக்கு உள்ளது?
வெற்றி பெற்ற மனிதர்களிடம் மிகுந்திருப்பது
அறிவா? உணர்வா?
நீங்கள் அறிவு சொல்வதைக் கேட்கிறீர்களா?
உணர்வு சொல்வதைக் கேட்கிறீர்களா?
என அறிவு குறித்த பகிர்வுக்கான களமாக இதனை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்..
தொடர்புடைய இடுகை தங்கள் பார்வைக்காக
சூப்பர் சார் ........
ReplyDeleteபகிர்வுக்கு தேங்க்ஸ் சார் ..
அறிவு என்பது அனுபவத்தால் கிடைப்பது ஒரு குழந்தை அனுபவத்தின் மூலமே அறிவைப் பெறுகிறது அனுபவம் மூலம் கிடைக்கும் அறிவு நிலைத்து இருக்கும் இது என் கருத்து
ReplyDeleteviraivil karuththuraikkiren
ReplyDeleteவிவேக அறிவு தான் மனிதனுக்கு ப்ரதானம்(முக்கியம்) என்பது என் கருத்து.. நண்பரே...
ReplyDeleteமுனைவரே நீங்கள் கொடுத்த இந்த தலைப்புக்கள் எல்லாம்
ReplyDeleteசும்மா பேசுனா பேசிக்கிட்டே இருக்கலாம்... அப்படி பட்ட தலைப்புக்கள்..
என் தொழிலை மைய்யமாக கொண்டே நான் சொல்கிறேன், நான் தொழிலுக்கு சேர்ந்தது என் கல்வி அறிவை வைத்துதான், அங்கே சேர்ந்த பின்னர் எனக்கு வேலையை கற்றுக்கொடுத்தவர் எழுத படிக்க மட்டுமே தெரிந்த துவக்கப்பள்ளி மட்டுமே பயின்ற ஒரு பழுத்த அனுபவசாலி...
அவரிடமிருந்துதான் நான் நிறைய கற்றுக்கொண்டேன்..
என்னைப்பொருத்த அளவில் கல்வியுடன் சேர்ந்த அனுபவ அறிவே தலைசிறந்தது...
நியூட்டன் என்ற அறிவியல் மேதை மரத்தினின்று ஆப்பிள் பழம் விழுவதை பார்த்தார் பின்னர் உணர்ந்தார், அந்த உணர்ச்சியே அவரை புவியீர்ப்பு விசையை கண்டறிய தூண்டியது...
ஆகவே வெற்றிபெற்றவர்களிடம் மிகுந்து இருப்பது உணர்வே என்பது என் வாதம்.
மூன்றாவது கேள்வியல்ல கணை, உணர்வு உணர்வதற்கு மட்டுமே, உணர்ந்த பின்னர் அறிவின் துணையுடன் காரியத்தை ஆற்றலால் சாதிக்க வேண்டும். ஆக நான் அறிவின் சொல்லைத்தான் கேட்பேன்.
நன்று முனைவரே...
அனுபவ அறிவுதான் சிறந்த்தது என்பது என் கருத்து முனைவர் அவர்களே..
ReplyDeleteநன்றியுடன்
சம்பத்குமார்
சுய அறிவும், அறிஞர்களின் அறிவும்(நல் புத்தங்கள் வாயிலாக வரும்), அனுபவ அறிவும் இணைந்த அறிவே சிறந்தது நண்பரே
ReplyDeleteஅறிவெனப்படுவது யாது... அறியபட வேண்டிய பதிவுகளை சுட்டி போட்டு இழுத்துச்சென்றது.. அருமை அனைத்தும் அறிவிக்கான அருமையான பதிவுகள்... வாழ்த்துக்கள்
அப்பறம் தமிழ் காற்று நம்ம பக்கம் வீசமாட்டேங்குதே...
பட்டும் சுட்டும் பெறும் அனுபவங்களே ஆசான்!
ReplyDeleteஅறிவு என்பது வேறு, புத்தி என்பது வேறு என்று கூறுவார் என் தந்தை... அறிவாளிகள் புத்திசாலி இல்லை... புத்திசாலிகள் அறிவாளிகள் இல்லை என்பார்... நான் வாழ்க்கையில் தோற்ப்பதர்க்கு காரணமே நான் புத்திசாலி இல்லை என்பது அவர் கருத்து... அதாவது வளைவு நெளிவுகளில் விட்டு கொடுத்து செல்பவனே புத்திசாலி என்று கூறுவார்.. என் கொள்கையில் இருந்து நழுவாமல் நான் செல்லும் வரை நான் வெற்றி ஆலனே என்பது என் கருத்து...
ReplyDeleteமுனைவரே நல்ல பதிவு!
ReplyDeleteஎண்ணம் முதலே அதன்பின் தானே
செயல் அது போல
உணர்வு உந்த வரும் அறிவின் தேடலே
அனுபவமாகிறது. இதவே என்கருத்தாகும்
புலவர் சா இராமாநுசம்
ithanai arivaa..vaalththukkal
ReplyDeletehttp://thoguppukal.wordpress.com/2011/10/01/%e0%ae%86%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf/
ReplyDeleteபுதிய இலக்கிய வலைப்பூவை பார்த்தேன், தங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்..
வருகைக்கு நன்றி ஸ்டாலின்
ReplyDeleteஅழகாகச் சொன்னீங்க ராக்கெட் இராஜா..
ReplyDeleteவருகைக்கு நன்றி இரஜினி பிரதாப்.
ReplyDeleteதங்கள் கருத்துக்கு நன்றி இராஜா..
ReplyDeleteகல்வியுடன் சேர்ந்த அனுபவ அறிவே தலைசிறந்தது...
ReplyDeleteஎன்று விரிவான மறுமொழி வழங்கிய அன்பு நண்பர் மகேந்திரன் அவர்களே நன்றி்..
நன்றிகள் சம்பத்..
ReplyDeleteஅனுபவ அறிவு இல்லாவிட்டால் நாம் இந்த அளவுக்கு உயர்ந்திருக்க முடியாது என்பது உண்மைதான்..
அன்பு நண்பர் மாயஉலகம்
ReplyDeleteதாங்கள்
அறிவைத் தேடிவந்து
அறிவைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள்..
நன்றாகச் சொன்னீர்கள் இராஜேஷ்வரி..
ReplyDeleteவளைவு நெளிவுகளில் விட்டு கொடுத்து செல்பவனே புத்திசாலி
ReplyDeleteஎவ்வளவு பெரிய உண்மை..
பகிர்வுக்கு நன்றி சூர்யஜீவா.
உணர்வு உந்த வரும் அறிவின் தேடலே
ReplyDeleteஅனுபவமாகிறது என்று அழகாகச் சொன்ன புலவரே..
தங்கள் அனுபவம் எங்களுக்குப் பாடமாகட்டும்..
நன்றிகள்..
வருகைக்கு நன்றி மதுரை சரவணன்.
ReplyDeleteஅறிவு சொல்வதைக் கேட்பதே சரியானது.
ReplyDeleteபட்டுத் தெளிந்த அனுபவ அறிவு கற்றுத்தந்த பாடம்
ReplyDeleteஎனக்கும் எக்கச்சக்கம். வெக்கத்தை விட்டுச் சொல்கின்றேன் வாழ்க்கை என்ற ஓடம் தடம்புரளும்போது அனுபவம் நிறைந்த
ஆசான் அதை அழகாய் ஓட்டிச் செல்வான் .விஞ்ஞானம் வியந்து கற்க வேண்டும் பள்ளி அறையில் .அதிலும் சிறந்த மெய்ஞானம்
உணர்ந்து கற்க வேண்டும் அனுபவ முறையில் .எந்நாளும் சிறந்த பதிவிடும் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு ....
அறிவுரைக்கு நன்றி சண்முகவேல்.
ReplyDeleteஆழ்ந்த புரிதலுக்கும்..
ReplyDeleteதெளிவான விளக்கத்துக்கும்..
நன்றி அம்பாளடியாள்.
சூப்பர்
ReplyDeleteஇன்றைய வலைச்சரத்தில் – புறாவும் பூவும் – ஒரு குட்டிக்கதை….
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2011/10/blog-post_15.html
உங்கள் வலைப்பூ பற்றி சொல்லியிருக்கிறேன். முடிந்தால் பாருங்கள்….
நட்புடன்
ஆதி வெங்கட்.
என்னைப்பொருத்த அளவில் கல்வியுடன் சேர்ந்த அனுபவ அறிவே தலைசிறந்தது.. நல்ல பதிவு.
ReplyDeleteஎனக்கு இருப்பது என்ன வகையான அறிவு என்ற அறிவே எனக்கில்லையே ... என்ன செய்ய ?
ReplyDeleteமேலே நீங்கள் கேட்ட கேள்விக்கு விடை, பாஸ்பரஸ்.
ReplyDeleteவள்ளுவனார் சொல்கிறார்,
எதிரதா காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.
சந்தேகமே இல்லாமல் அறிவு நம்மை சிறந்தவர்களாக்கும். ஆனால் அறிவில் குறைந்தவர்களும் நிறைய சாதித்திருக்கிறார்கள். காரணம் அவர்களது உள்ளுணர்வு. ஆனால் எல்லோருக்கும் உள்மனக் குரலை கவனிக்கும், புரிந்து கொள்ளும் பக்குவம் வாய்ப்பதில்லை.
வருகைக்கு நன்றி இராதாகிருஷ்ணன்.
ReplyDeleteமகிழ்ச்சி வெங்கட்.
ReplyDeleteதங்கள் கருததுப் பகிர்தலுக்கு நன்றிகள் காஞ்சனா.
ReplyDeleteஎனக்கு அறிவு இல்லை என்பதை அறிந்து வைத்திருப்பதுவே பெரிய அறிவின் வெளிப்பாடு தானே சிவக்குமரன்??
ReplyDeleteஅழகான புரிதலும் வெளிப்பாடும் அருமை ரசிகன்..
ReplyDeleteஅறிவை பற்றிய நல்ல பதிவுகள் முனைவர் அவர்களே! நானும் என் வலைப்பூவில் “அறிவை பகுத்தறிவோம்!” என்ற தலைப்பில் அறிவைப்பற்றி எழுதியுள்ளேன். தங்களுக்கு விருப்பமிருந்தால், வந்து பார்வையிட்டு கருத்துக்களை கூறலாம்.
ReplyDelete