தமிழின், தமிழரின் பண்பாட்டு வேர்களைத்தேடி வந்த தமிழ் உறவுகளே...
வணக்கம்..
தமிழ்க்காற்று என்னும் இவ்வலைப்பக்கம் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு குறி்த்த கல்விப் புலம் சார்ந்த வலைப்பதிவர்களை அடையாளப்படுத்த விரும்புகிறது.
தமிழ்மணம், இன்லி, தமிழ்வெளி என எண்ணற்ற திரட்டிகள் இருந்தாலும்....
எந்தத் திரட்டிகளிலுமே கல்விப்புலம் சார்ந்த பதிவுகளுக்கோ, இலக்கியம் சார்ந்த பதிவுகளுக்கோ “.இலக்கியம்“ என்னும் பிரிவு கூடப் பாகுபடுத்தப்படவில்லை..
அதனால் நானறிந்த கல்விப்புலம் சார்ந்த, இலக்கியத்துறை சார்ந்து எழுதக்கூடிய பதிவர்களை இங்கு திரட்ட விரும்புகிறேன்...
நீங்கள்....
ஆசிரியர் பணி செய்துகொண்டே வலைப்பதிவு எழுதுபவரா?
விரிவுரையாளராக இருந்துகொண்டே வலைப்பதிவில் எழுதுபவரா?
கல்விப்பணியில் ஓய்வுபெற்ற பதிவரா?
இலக்கியம் சார்ந்து வலைப்பதிவில் எழுதுபவரா?
தமிழ் மொழியின், தமிழரின் பண்பாடுகள் குறித்து எழுதுபவரா?
நான் இலக்கியக் காற்று வாங்கச் செல்லும் சில வலைப்பதிவுகளை இங்கே வரிசைப்படுத்தியுள்ளேன்..
நீங்கள் அறிந்த பதிவுகளைக் கூட அறிமுகம் செய்யலாமே...
(இந்த வலைப்பக்கத்தில் தினம் ஒரு இலக்கியம், வாழ்வியல் குறித்த சிந்தனைக்கான களத்தை உருவாக்க எண்ணியுள்ளேன். கலந்துகொள்ள அன்புடன் உங்களையும் அழைக்கிறேன்)
தமிழ்காற்று வாங்க தொடர்கிறோம்.முயற்சிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.நன்றிகளும்.
ReplyDeletehttp://gokulmanathil.blogspot.com
புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஐயா!
ReplyDeleteஉங்களின் தமிழ்ப்பணி மென்மேலும் சிறக்க வேண்டும்...
மிகச் சிறந்த முயற்சி. இலக்கியத்திற்கென்று தனித் திரட்டி இல்லயையே என்பட்க்ஹு எனது நீண்ட நாள் ஆதங்கம். தாங்கள் இதற்குப் பொருத்தமான தகுதியானவர். வாழ்த்துககள்!
ReplyDeleteஇந்த வலைப்பூவை உங்களின் மேலான பார்வைக்கு வைக்கிறேன்.
ReplyDeleteஇவ்வலைப்பூவைப் பாருங்கள்
ReplyDeleteகவிதை பாட
ReplyDeleteவெண்பா வனம்
ReplyDeleteஉங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் முனைவரே...
ReplyDeleteமிக நல்ல முயற்சி .
ReplyDeleteவாழ்த்துக்கள் .
வகுப்பெடுக்கும் ஆசிரியர்களுக்கான தளமாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
ReplyDeleteஏன்னா ,இங்கு கைடுகள் பல கிடைக்கின்றன .
தனி அழகு மிளிர வலைத் தோற்றம்
ReplyDeleteஅமைந்துள்ளது வளர வாழ்த்துக்கள்
புலவர் சா இராமாநுசம்
காலதர் என்றால் என்ன முனைவரே..
ReplyDeleteஐயா தங்களின் முயற்சிக்கு நன்றிகள். தங்களின் பார்வைக்கு இந்த தளத்தை அறிமுகப்படுத்துகிறேன். சமயக்கருத்துக்களோடு சமூகத்திற்கு தேவையான பகுத்தறிவு கருத்துகளையும் விளக்கி தமிழ் வளர்க்கும் தளம்.
ReplyDeletehttp://www.manivasagar.com/Karuvaraikul_makalir.html
தமிழார்வன்.
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் முனைவரே.
ReplyDeleteநன்றி கோகுல்
ReplyDeleteமகிழ்ச்சி நண்பரே
நன்றி மாணவன்
தங்கள் அறிமுகங்கள் அனைத்தும் அருமை இரஜினி பிரதாப்..
ReplyDeleteஇற்றைப்படுத்திவிட்டேன்..
நன்றிகள்.
நன்றி நண்டு..
ReplyDeleteநன்றி புலவரே.
ஜன்னல் (வடமொழி)
ReplyDeleteகாலதர் (தமிழ்)
கால் - காற்று
அதர் - வழி
காற்று வரும் வழி - காலதர்.
தங்கள் வினாவுக்கு நன்றிகள் சூரிய ஜீவா.
நன்றி தமிழார்வன்..
ReplyDeleteஇவ்வலைப்பக்கத்தில் இலக்கிய வலைப்பதிவுகளுக்கே முன்னுரிமை தரவேண்டும் என்று எண்ணுகிறேன்
இலக்கியம் பேசும் இணையதளங்கள் விழுதுவிட்டு நிற்கின்றன..
இலக்கியம் பேசும் வலைப்பதிவுகளே இளம் செடிகளாக இருக்கின்றன என்று கருதுகிறேன் தமிழார்வன்.
தங்கள் பார்வைக்கு நன்றிகள்
வாழ்த்துக்கள். கல்யாண்ஜியையும்,விக்ரமாதித்யனையும் கண்டு மிரண்டு போனவன்.
ReplyDeletehttp://poetarivazhagan.blogspot.com
வருகைக்கும் அறிமுகத்துக்கும் நன்றி அறிவழகன்.
ReplyDeleteகுளு குளு தமிழ்க்காற்று என் மீதும் வீசச் செய்தமைக்கு நன்றி முனைவரே!
ReplyDeleteதமிழ்காற்று வாங்க தொடர்கிறோம்.முயற்சிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.நன்றிகளும்.
ReplyDeletehttp://jaghamani.blogspot.com
வணக்கம் குணசீலன். நன்முயற்சி. தொடரட்டும். தங்கள் இணையத்தமிழ்ப் பணி. வாழ்த்துக்கள்.
ReplyDeleteமின்னூல்த் தொகுப்பில் 'த்' ஐ நீக்கியதற்குப் பாராட்டுக்கள்!
ReplyDeleteதங்கள் முயற்சியைப் பெரிதும் பாராட்டி நன்றி கூறுகிறேன் முனைவரே. காற்று வாங்க நானும் இணைந்துவிட்டேன்.
ReplyDeleteவருகைக்கு நன்றி சென்னைப்பித்தன் ஐயா..
ReplyDeleteமகிழ்ச்சி இராஜேஷ்வரி
ReplyDeleteநன்றி முனைவர் மணி.
ReplyDeleteவருகைக்கு நன்றி இரஜினி
மகிழ்ச்சி கீதா.
மின்சிட்டு .. இவ்வலைப்பூவைப் பாருங்கள்
ReplyDeleteபார்வையிடுகிறேன் நண்பா..
ReplyDeleteஐயா... வணக்கம்...
ReplyDeleteஎன் தளத்தைப் பார்வையிடுங்கள்... தகுதி உடையதாயின் தமிழ் காற்று அங்கும் வீசட்டும்:
http://aalunga.blogspot.com