உங்களுக்குப் பிடித்த பண்பாடு?


பண்பட்ட வாழ்க்கையின் அடையாளமே பண்பாடு!

நிலம், சூழல், மாந்தர்தம் அறிவுநிலைக்கு ஏற்ப ஒருவருக்கொருவர் பண்பாடு மாறுபடுகிறது.

இன்று பெருவையமே சிறுகிராமமாக மாறிப்போய்விட்டது. அதனால் உலகுபரவி வாழும் மனிதசமூகத்தின் பண்பாட்டு மரபுகளை தொலைக்காட்சியும், இணையமும் விரல்நுனிக்கும், கண்பார்வைக்கும் கொண்டுவந்துவிடுகின்றன.

எனது பண்பாடுதான் உயர்ந்தது என்று கிணற்றுத்தவளையாக இருப்பதும் தவறு.


பிறர் பண்பாடுகளே உயர்ந்தது என்ற கண்மூடித்தனமாக வாழ்வதும் தவறு.


எல்லாப் பண்பாடுகளையும் அறிந்துகொள்வதும்
நம் பண்பாடுகளின் உண்மையான பொருளை அறிந்துகொள்வதும் நம் கடமை.

எனக்குப்பிடித்த பண்பாட்டுக் கூறுகளை.. “எதிர்பாராத பதில்கள்“ என்னும் இடுகையில் பதிவு செய்துள்ளேன்.

உங்களுக்குப் பிடித்த நாடுகளில் பின்பற்றப்படும் பண்பாட்டுக்கூறுகளையும்..
தமிழர் பண்பாட்டுக்கூறுகளுள் உங்களுக்குப் பிடித்த வழக்கத்தையும் பகிர்ந்துகொள்ள ஏற்ற இலக்கியடையாக இப்பதிவைத் தங்கள் முன் வைக்கிறேன்...